பெரிய பிரச்சனை, பிரேக் அப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா-.. சஞ்சீவ் திடுக்கிடும் தகவல்
சஞ்சீவ்-ஆல்யா
ராஜா ராணி, விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் ஹிட்டாக ஓடிய தொடர்.
பிரவீன் பென்னட் இயக்க சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். அந்த சீரியலில் இருவரும் இணைந்து டாப் ஜோடியாக நடிக்க காதலர்களாக மாறி நிஜத்திலும் இணைந்தார்கள்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் பிரம்மாண்ட வீடு கட்டினார்கள், விலையுயர்ந்த கார், போட் ஹவுஸ் என வாங்கினார்கள். அடுத்தடுத்து வாழ்க்கையில் முன்னேறி வரும் இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
பிரபலத்தின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் சீரியல் நடிகர் சஞ்சீவ் காதலிக்கும் போது தனக்கும் ஆல்யாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நாங்கள் காதலிக்கும் போது ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டது, அது பெரிய பிரளயமாக மாறியது. இதனால் இவர் நான் சீரியலில் நடித்தால் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்துவந்து பெரிய பிரச்சனை செய்ய ராஜா ராணி சீரியல் நிற்கும் அளவிற்கு ஆனது.
அந்த பிரச்சனையில் இவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் வீசிங் வந்துவிட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை வைத்து நடிக்க வைத்தார்கள், என் கண்முன்னே ஆடிஷனும் நடந்தது.
இதையடுத்து ஆல்யாவே ஒரு நாள் சமாதானம் ஆகி என்னை நடிக்க சம்மதித்தார், அப்போது முழு பிரேக்கப்பில் இருந்தோம். வருவோம், நடிப்போம், அவரவர் அறைக்கு சென்றுவிடுவோம்.
பின் ஆல்யாவே எனது நண்பர் மூலம் தூதுவிட்டு பேச ஆரம்பித்தார், இதெல்லாம் ஒரு வாரத்தில் நடந்து முடிந்தது என கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu
