சீரியல் நடிகர் வெங்கட்-நிஷாவா இது?- அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா, இதுவரை பார்த்திராத போட்டோ
வெள்ளித்திரை கலைஞர்களை விட நாம் அதிகம் இப்போது கவனிப்பது சின்னத்திரை கலைஞர்களை தான். அதிலும் கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கிய மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது தொலைக்காட்சி.
அப்படி தமிழில் சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் வெங்கட்.
அவரைப் பற்றிய தொகுப்பு
தெலுங்கானாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் செட்டில் ஆனவர். ஆனந்தம், குலதெய்வம், செல்லமே, அலைகள், உறவுகள் சங்கமம், ரோஜா கூட்டம், ராஜகுமாரி, கல்யாணபரிசு, அத்திப்பூக்கள், திருமதி செல்வம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களின் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.
ஜோடி No1
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி படு ஹிட்டானது ஜோடி நம்பர் 1 தான். இதில் அனைத்து முன்னணி சீரியல் கலைஞர்களும் கலந்துகொண்டு மக்களின் கவர்ந்தார்கள். வெங்கட்டும் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவியுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கியூட் ஜோடி என பெயர் வாங்கினார்.
குடும்ப புகைப்படம்
சீரியல்களில் தொடர்ந்து நடித்துவந்த வெங்கட் திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டார். இப்போது தான் நம்ம வீட்டு பொண்ணு தொடர் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் வெங்கட்-நிஷா-மாயா (அவரது மகள் பெயர்) 3 பேரும் குடும்பதாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்- கலக்கல் புகைப்படங்கள்