சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டதே இதனால் தானா?- வெளிப்படையாக கூறிய நடிகை
படங்களை தாண்டி சீரியல்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் பேசப்படுகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் நல்ல ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் நடிகை தேவி கிருபா.
20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் பயணித்து வருகிறார்.
மீடியா பயணம் குறித்து நடிகை
13 வயதில் இருந்தே இந்த துறையில் இருக்க எனக்கு டிசைனிங் மீது அதிக ஆர்வம் வந்தது. இதனால் 5 வருடத்திற்கு முன்பு டிசைனிங் படிப்பு படித்து இப்போது எனக்கு நானே டிசைன் செய்துகொள்கிறேன்.
எனக்கு ஆனந்தம் சீரியல் பெரிய ரீச் கொடுத்தது, அதில் நடித்தவர்கள் அனைவருடனும் இப்போதும் நான் பேசிக்கொண்டு வருகிறேன்.
நடிகர் சங்கம்
நடிகர் சங்கத்தில் நுழைந்த பிறகு அரசியல் என்றால் என்ன என்பது புரிந்துகொண்டேன். அண்ணன், தம்பியாக பழகி வந்தவர்கள் எல்லாம் பதவிக்காக மாறிவிட்டார்கள். நடிகர் சங்க தேர்தல் இந்த முறை நடக்குமா என தெரியவில்லை, ஆனால் என்னை பதவிக்காக பலரும் மிரட்டியுள்ளார்கள் என கூறியுள்ளார்.
மேலும் அவர் நடிகர் சாய் பிரசாந்த் மிகவும் தைரியமான நபர் தான். சாப்பாடு, பணம் இல்லாமல் தான் அவன் இறப்பிற்கு காரணம். மனைவியுடன் பிரச்சனை, சம்பளப் பிரச்சினையால் தான் இறந்ததாக அவன் லெட்டரில் எழுதி வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன் என பேசியுள்ளார்.
இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா?- சினிமா பிரபலம் ஓபன் டாக்