காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்த நடிகை ஆல்யா மானசாவா இது?- என்ன குத்தாட்டம் போடுகிறார் பாருங்க
நடிகை ஆல்யா மானசா
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடன கலைஞராக தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் அப்படியே விஜய் டிவி பக்கம் அவரை வரவழைத்தது.
பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி என்ற தொடரில் சஞ்சீவுடன் ஜோடியாக இணைந்து நடித்தார். அந்த சீரியல் முடிவுக்கு வர அவரது வாழ்க்கை தொடங்கியது. அதாவது சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்.
அந்த தொடருக்கு பிறகு ராஜா ராணி 2 தொடரில் ஆல்யா நடிக்க பின் பாதியிலேயே வெளியேறினார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் குத்தாட்டம்
சில மாதங்களுக்கு முன் நடிகை ஆல்யா மானசாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். இடையில் காலில் ஆபரேஷன் எல்லாம் நடந்தது, அதனை கூட வீடியோவாக வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். காலில் பிரச்சனை என இருந்த ஆல்யா இப்படி குத்தாட்டம் போட்டு வெளியிடுவது ரசிகர்களுக்கு சந்தோஷமாக தான் உள்ளது.
முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்