சீரியல் நடிகை ஆல்யா மானசா வீடு, கார்கள் என ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இப்படி தானா?- சைபர் கிரைம் பரபரப்பு புகார்
ஆல்யா மானசா
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த சீரியல் ராஜா ராணி.
தொடர் பெயருக்கு ஏற்றார் போல் இருவரும் ராஜா ராணியாக இணைய ரசிகர்களும் வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு பின் ஆல்யா மற்றும் சங்சீவ் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இருவருமே சன் தொலைக்காட்சியில் வெவ்வேறு தொடர்கள் நடிக்கிறார்கள். சஞ்சீவ் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் கயல் தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
மோசடி புகார்
எம்.எல்.எம் நிறுவனம் சீரியல் நடிகை ஆல்யா மானசா பெயரை பயன்படுத்தி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சி செய்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிறுவனத்தை சார்ந்த சிலர் பிரபலங்களுக்கு போன் செய்து ஆல்யா மானசா தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக சொல்லி வருகிறார்களாம். இதனால் பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் ஆல்யா மானசாவிற்கு போன் செய்து ஆலோசனை கேட்க நடிகை நான் எதிலும் முதலீடு செய்யவில்லை என மறுத்துள்ளார்.
இதனால் ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இருவரும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்களாம். வீடு, கார், பைக் என எல்லாமே EMI மூலம்தான் வாங்கியிருக்கிறோம், இப்போதும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் நடிப்பில் கிடைக்கும் சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நாங்கள் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை என இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.