Surgery செய்ய ஆபரேஷன் தியேட்டர் செல்லும் முன் நடிகை ஆல்யா மானசா போட்ட பதிவு- பயமாக இருக்கிறது, ஆனால்?
நடிகை ஆல்யா மானசா
தமிழ் சினிமாவை தாண்டி இப்போதெல்லாம் சீரியல் நடிகைகள் தான் மக்களிடம் நல்ல ரீச் பெறுகிறார்கள்.
சீரியல் நடிகைகளும் எப்போதும் மக்களுடன் ஆக்டீவாக இருக்க வேண்டும் என இன்ஸ்டாவில் தங்களது சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை ரசிகர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்.
அப்படி எங்கே சென்றாலும், குழந்தைகளுக்கு என்ன வாங்கினாலும், என்ன பரிசு வந்தாலும் அதை அப்படியே வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருப்பவர்கள் சீரியல் பிரபலங்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா தான்.
நடிகைக்கு ஆபரேஷன்
துபாயில் புதிய வருடத்தை கோலாகலமாக கொண்டாடிய ஆல்யாவிற்கு காலில் அடிபட்டுள்ளது. இதனால் காலில் கட்டுகட்டி வீல் சேரில் படப்பிடிப்பிற்கு எல்லாம் சென்றார்.
தற்போது இன்னும் சில நிமிடத்தில் நடிகை ஆல்யாவிற்கு சர்ஜரி நடக்கப்போகிறதாம். அதற்கு முன் தனது கணவர் சஞ்சீவுடன் ஒரு புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டு, சர்ஜரி நடக்கப்போகிறது, எனக்கு பயமாக இருக்கிறது.
ஆனால் எனது கணவர் என்னுடன் இருக்கிறார், கடவுள் கொடுத்த பரிசு அவர் என கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,
கர்நாடகாவிலும் வசூல் வேட்டை நடத்திய அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு- டாப் வசூல் யார்?