50 நாட்களில் 16 கிலோ எடையை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஆல்யா மானசா
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அறிமுகம் பற்றி சொல்லவே தேவையில்லை. காரணம் அந்த அளவிற்கு அவரைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் தெரிந்துகொண்டுள்ளனர்.
கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரது பயணம், விஜய்யில் ராஜா ராணி, ராஜா ராணி 2 இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா சீரியல் என தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
இடையில் சீரியலில் நடிக்கும் போது சஞ்சீவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றுவிட்டனர்.
தனியாக ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்கள்.
வெயிட் லாஸ்
இரண்டாவது குழந்தைக்கு பிறகு நடிகை ஆல்யா மானசா குண்டாக காணப்பட்டார். ஆனால் உடனே உடற்பயிற்சி, டயட் என இருந்து 50 நாட்களில் 16 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
ரன்னிங், வாக்கிங் செல்வது, கடுமையான உடற்பயிற்சி, தினமும் காலையில் எழுந்தவுடன் சீரகத் தண்ணீர் மற்றும் தேன் கலந்த சுடு தண்ணீர் குடிப்பதால் பெருமளவு உடல் எடையை குறைக்க முடியும் என டிப்ஸ் கொடுத்துள்ளார் ஆல்யா மானசா.
அதோடு தன்னால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற தன்நம்பிக்கையோடு முயற்சி செய்ததால் உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.