கோபிநாத், நீங்கள் என்ன பெரிய நீதிபதியா... நீயா நானா ஷோ குறித்து பிரபல சீரியல் நடிகை
நீயா நானா
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் தரமான கான்செப்டுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா.
பல ஆண்டுகளாக சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்கள், அன்றாடம் மக்கள் எதிர்க்கொள்ளும் விஷயங்கள், சில நேரங்கள் ஜாலியான விவாதங்கள் என நிறைய நீயா நானா நிகழ்ச்சியில் நடந்துள்ளது.
அப்படி சமீபத்தில் தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து விவாதம் நடக்க அந்த எபிசோட் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் நாய்கள் குறித்து கருத்து தெரிவித்த சிலரின் பேச்சு தவறாக காட்டப்பட்டதாக பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
சீரியல் நடிகை
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை சந்தியா பேசுகையில், விஜய் டிவியும் கேடு கெட்ட மீடியா லிஸ்டில் இணைந்துவிட்டார்கள்.
ஒருபக்கம்தான் நியாயப்படுத்தனும்னா எதுக்கு இந்த நிகழ்ச்சி, அதுக்கும் மேல நீதிமன்றத்துல கேஸ் போய்கிட்டு இருக்கு, தீர்ப்புக்கு காத்துட்டு இருக்கோம்.
இவங்க என்னவோ நீதிபதி மாதிரி இந்த நிகழ்ச்சியை நடத்தி இன்னமும் நாய்கள் மேலையும், நாய் பாதுகாவலர்கள் மேலயும் இருக்கும் வெறுப்பை வளர்த்து விடுறது ஒரு பொறுப்புள்ள மீடியா பண்ற விஷயமா? கோபிநாத் நீங்க என்ன நீதிபதியா? என கோபமாக பேசியுள்ளார்.

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
