பிரசவ வலியில் துடிதுடித்து கையில் குழந்தை பெற்ற தருணம் வரை வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை அனு- எமோஷ்னல் வீடியோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
சீரியல் நடிகை அனு
சன் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை அனு.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் அதன்பிறகு மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் நடித்தார்.
சன், விஜய், ஜீ தமிழ் என பல சேனல்களின் சீரியல்களில் நடித்திருக்கிறார்.
நடிகை அனு 2017ம் ஆண்டு விக்னேஷ் எனபவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அதன்பிறகும் சீரியல்களில் நடித்துவந்த அனு 5 வருடம் கழித்து கர்ப்பமானார்.
டெலிவரி வீடியோ
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை அனுவிற்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
அவர் பிரசவ வலியில் துடித்தது முதல் கையில் குழந்தையை முதன்முறையாக வாங்கியது வரை அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்தவர்கள் அனைவருமே மிகவும் எமோஷ்னல் ஆகியுள்ளனர்.
பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த தனுஷ்- லேட்டஸ்ட் க்ளிக்
You May Like This Video