முடி நீளமாக வளர சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனா என்ன செய்கிறார் தெரியுமா?- இதோ டிப்ஸ்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொடராக இப்போது அமைந்துள்ளது சிறகடிக்க ஆசை.
மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி ப்ரீயா இதற்கு முன் விஜய்யிலேயே ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற தொடரில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் சில சீரியல்கள் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் வெற்றி வசந்த் என்பவர் நடித்து வருகிறார். அவர் சீரியலில் நடிக்க தொடங்கிய வேகத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
முடி வளர டிப்ஸ்
தற்போது தனது முடியை நீளமாக வளர்க்க கோமதி ப்ரீயா என்னென்ன செய்கிறார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தலைக்கு குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் அதிகமாக வைத்து முதலில் மசாஜ் கொடுப்பாராம், 1 மணி நேரம் பிறகு ஹேர் வாஷ் செய்வாராம்.
செம்பருத்தி என்ணெய், அரைத்த பேஸ்ட் இதில் எதாவது ஒன்றை வாரம் ஒருமுறை தலை முடியில் அப்ளை செய்வாராம்.
முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கு வாழைப்பழம் பெஸ்ம் சாய்ஸ். வாழைப்பழத்தை வெறுமையாக அரைத்து தலையில் ஹேர் பேக் போல் அப்ளை செய்வாராம்.