நான் விவாகரத்து பெற்றதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல- சீரியல் நடிகை ஆவேசம்
சினிமா பிரபலங்களில் கடந்த சில மாதங்களில் நாம் நிறைய விவாகரத்து செய்தி பார்த்து வருகிறோம். கடந்த வருட இறுதியில் நடிகை சமந்தா விவாகரத்து தொடங்கி தனுஷ், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் பாலா என தொடர்ந்து பார்த்தோம்.
இப்போது ஒரு சீரியல் பிரபலத்தின் விவாகரத்து செய்தியும் ஒரு சர்ச்சை விஷயமும் வலம் வருகிறது.
ஹரிப்பிரியா-விக்னேஷ்
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹரிப்பிரியா. அதன்பிறகு பிரியமானவளே, கண்மணி என தொடர்ந்து சீரியல்கள் நடிக்க வாணி ராணி தொடர் புகழ் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
கிசுகிசுவில் சிக்கிய ஹரிப்பிரியா
இப்போது ஹரிப்பிரியாவுக்கும் பிரபல தொகுப்பாளர் அசாருக்கும் நெருக்கம் இருந்ததாகவும் இதனால் தான் விக்னேஷ் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் எனப்பட்டது.
ஹரிப்பிரியா கொடுத்த விளக்கம்
ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். எங்களுக்கு எந்த ஜாதி, மதம், எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான்.
அவர் என் காதலனோ, கணவரோ கிடையாது. மகிழ்ச்சியுடன் பேசுவது என்னுடைய பிறப்புரிமை. இதனால் தவறு என் மேல் இல்லை, அதை தவறாக பார்ப்பவர்கள் மேல் தான் உள்ளது என ஹரிப்ரியா பதிவிட்டுள்ளார்.
மாடர்ன் உடையில் செமயாக கலக்கும் ராஜா ராணி 2 சீரியல் நாயகி ரியா- கலக்கல் புகைப்படங்கள்