பிக்பாஸில் வரப்போகும் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை- கிளாமர் போட்டோ ஷுட் பிரபலமமா?
பிக்பாஸ் 7
100 நாட்கள், ஆணும்-பெண்ணும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற கான்செப்டில் ஒரு நிகழ்ச்சி தொடங்குகிறது என்ற கேட்டவுடனேயே தமிழக மக்கள் இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என விமர்சித்தார்கள்.
ஆனால் இப்போது அதே மக்கள் 7வது சீசன் எப்போது தொடங்குகிறது என ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் மாதம் நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்கின்றனர், ஆனால் சரியான தேதி இதுவரை அறிவிக்கவில்லை.
சீரியல் நடிகை
ஒவ்வொரு நாளும் இந்த 7வது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர் இவர் என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது.
அப்படி இன்றும் ஒரு பிரபலத்தின் பெயர் வந்துள்ளது, அவர் வேறுயாரும் இல்லை செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருந்த நடிகை தர்ஷா குப்தா தானாம்.
இவர் நிகழ்ச்சியில் வருவது உறுதி என கூறுகின்றனர்.