8 வாரத்தில் படு ஒல்லியாக மாறிய சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்- என்ன டயட் தெரியுமா?
ஜனனி அசோக்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் ஜனனி அசோக் குமார்.
நயன்தாரா நடித்த நண்பேண்டா படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய இவர் அதற்பிறகு நிறைய சீரியல்களில் தான் நடிக்க தொடங்கினார்.
மாப்பிள்ளை, செம்பருத்தி, மௌன ராகம், ஆயுத எழுத்து, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 என தொடர்ந்து சீரியல்கள் நடித்த வண்ணம் இருந்தார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக தான் அவரை நிறைய தொடர்களில் காண முடியவில்லை.
டயட் பிளான்
ஜனனி 8 வாரம் தொடர்ந்து சைவ உணவுகளை மட்டும் தான் எடுத்து கொண்டாராம். அசைவ உணவுகள் முட்டை, மீன், சிக்கன் என எதையும் புரோட்டீனுக்காக எடுத்து கொள்ளவில்லையாம்.
உடல் எடையை குறைக்க வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, வெள்ளை அரிசி என ஜனனி இவை எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டாராம். அதற்கு பதில் கவுனி அரிசி, நாட்டு சக்கரை சேர்த்து கொண்டாராம்.
கிரீன் டீ, பிளாக் காபி, ஸ்மூத்தி போன்ற பானங்களை தான் குடித்தாராம்.
பால், தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவில்லையாம், வெந்நீர் அதிகம் குடித்தாராம். இரவு 7 மணிக்கு மேல் எதையும் சாப்பிட மாட்டாராம், மறுநாள் காலை 8 மணிக்கு மேல் தான் காலை உணவு எடுத்துக் கொள்வாராம்.
இந்த டயட் முறையை சரியாக 8 வாரம் தொடர்ந்து பின்பற்றினாராம். உடல் எடை குறைந்ததும் வாக்கிங் மற்றும் யோகாவில் கவனத்தை திருப்பி கொண்டாராம்.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்துவிற்கு தொடரில் நடிக்க இவ்வளவு சம்பளமா?- வெளிவந்த தகவல்