நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்
பாடகி ஜொனிதா காந்தி செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களின் டீஸரில் காட்டப்பட இப்போது ரசிகர்களிடம் அதிகமாக பேசப்படும் ஒரு பாடகியாக மாறிவிட்டார்.
டீஸர்களில் பார்த்த ரசிகர்கள் அட இவர் நாயகி மெட்டீரியல், நடிக்க வரலாமே என தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தார்கள்.
ஜொனிதா பயணம்
டில்லியில் பிறந்த இவர் கனடா செல்ல நேர்ந்ததால் அங்கேயே வாழ்ந்து வந்தார். 17 வயதில் அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த ஒரு பாடலே ஜொனிதாவின் இசை ஆர்வத்திற்கு ஒரு உதவியாக இருந்தது.
மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படம் தான் தமிழில் அவர் பாடிய முதல் தமிழ் பாடலாகும். அதன்பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
போட்டோ ஷுட்
பாடல் உலகில் எல்லோரையும் அசத்திய ஜொனிதா விரைவில் நாயகியாக விடுவார் என கூறப்படுகிறது. காரணம் சமீபகாலமாக அவர் வித்தியாசமாக நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.
அண்மையில் அவர் கொடுத்த போஸ் ஒன்றை பார்த்த ரசிகர்கள் நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போலவே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
??♀️ pic.twitter.com/0hvmbLoBE1
— Jonita (@jonitamusic) May 5, 2022
இவ்வளவு வன்முறையா, சாணிக் காயிதம் படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் விமர்சனம்