மறுமணம் முடிந்து ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- எங்கே உள்ளார் பாருங்க
நடிகை மகாலட்சுமி
சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன் கேரியரை தொடங்கி பின் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் மகாலட்சுமி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார்.
பின் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். 2016ம் ஆண்டு மகாலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்தது, ஒரு மகனும் இருக்கிறார். பின் சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி.
மறுமணம்
இந்த நிலையில் தான் நடிகை மகாலட்சுமி திடீர் தகவலாக தயாரிப்பாளர் ரவிச்சந்திரனை திருமணம் செய்த புகைப்படங்கள் வெளியானது. மறுமணத்திற்கு பிறகு நடிகை மகாலட்சுமி ஹனிமூன் சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பே குக் வித் கோமாளி புகழ் ரகசிய திருமணம்- லீக்கான புகைப்படங்கள்