தெய்வம் தந்த வீடு சீரியல் புகழ் நடிகை மேக்னாவை நியாபகம் உள்ளதா?- விவாகரத்துக்கு பிறகு எப்படி உள்ளார் பாருங்க
தெய்வம் தந்த வீடு
விஜய் தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு ஒளிபரப்பான ஒரு தொடர் தெய்வம் தந்த வீடு. சீதாராம் சக்ரவர்த்தி என்பவர் இயக்கிய இந்த தொடர் 2017ம் ஆண்டு வரை ஓடியது.
இதில் மலையாள சினிமா நடிகை மேக்னா என்பவர் முக்கிய நாயகியாக நடித்து வந்தார், இல்லை இல்லை அழுதார் என்று தான் கூற வேண்டும். பாதி சீரியல் இவரது அழுகையிலேயே சென்றுவிட்டது.
இந்த தொடருக்கு பிறகு அவர் பொன்மகள் வந்தாள், அவளும் நானும் போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
திருமணம்
மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக சீரியல்களில் நடித்துவரும் போதே 2017ம் ஆண்டு டோனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
விவாகரத்திற்கு பிறகு நடிகை மேக்னா தொடர்ந்து மலையாள சினிமா தொடர்களில் நடித்த வண்ணம் உள்ளார்.
ஆடம்பர கார்கள், கடற்கரை பங்களா என வசதியாக இருக்கும் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு இவ்வளவா?