திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீரியல் நடிகை நிவிஷா- திடீரென என்ன ஆனது?
நடிகை நிவிஷா
சின்னத்திரை பிரபலங்கள் மக்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்துவிட்டார்கள்.
இதனாலேயே நிறைய இளம் நடிகைகள் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் அதிகம் நடிக்க வருகிறார்கள். அப்படி அறந்தாங்கியில் பிறந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்து நடிக்க தொடங்கியவர் நிவிஷா.
அவளுக்கு என்ன அழகிய முகம் என்ற படத்தில் முதலில் நடித்தார், ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை, இவருக்கும் ரீச் இல்லை.
எனவே சின்னத்திரை பக்கம் வந்தவர் தெய்வமகள், பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் தொடர்ந்து நடித்தார்.
மருத்துவமனையில் நடிகை
இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நிவிஷா ஸ்டோரியில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி பதிவு போட்டுள்ளார்.
அதாவது கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருவதாக பதிவு போட்டுள்ளார். ரசிகர்கள் நிவிஷா உங்களுக்கு என்ன ஆனது பதட்டத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.