பசங்க பட நடிகரை காதலிக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி- காதலை வெளிப்படுத்திய பிரபலங்கள்
சீரியல் நடிகை ப்ரீத்தி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி.
அதன்பிறகு லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என தொடர்கள் சீரியல்கள் நடித்திருந்தார்.
தற்போது இவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள தனது ஆசையை வெளிக்காட்டியுள்ளார் பசங்க பட நடிகர்.
காதல் திருமணம்
விமல் நாயகனாக நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் பசங்க.
இதில் அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெற்றியை கண்ட கிஷோருக்கு இப்படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் தான் தமிழக விருது எல்லாம் கிடைத்தது. இவரும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியும் காதலிக்கிறார்களாம்.
தனது காதலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அவரை விரைவில் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் பதிவு செய்துள்ளார்.
இதோ அவர்களின் அழகிய புகைப்படம்,
23 கோடி செலவில் உருவான விஷாலின் லத்தி நஷ்டத்தில் முடிந்ததா?- இதுவரை இவ்வளவு தான் வசூலா?