தாவணி கட்டிக்கொண்டு அழகாக நடித்த காற்றின் மொழி சீரியல் நடிகையா இது?- மாடர்ன் உடையில் எடுத்த போட்டோ வைரல்
காற்றின் மொழி
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரை முடித்த கையோடு சஞ்சீவ் நடித்த தொடர் காற்றின் மொழி.
இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா என்ற நடிகை நடித்திருந்தார். இந்த தொடர் தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் தொடரின் ரீமேக் தான்.
கடந்த 2019ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 331 எபிசோடுகள் ஒளிபரப்பாகி 2021ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் நடித்த நடிகை பிரியங்காவிற்கு கிராமத்து பெண்ணாக ஊமையாக நடித்திருந்தார்.
மௌன ராகம் சீரியல் மூலம் தமிழக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.
போட்டோ ஷுட்
தொடரில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக நடித்த பிரியங்கா நிஜத்தில் படு மாடர்ன். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
சில கன்னட படங்கள், விளம்பரங்கள் என நடித்துள்ள பிரியங்கா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
இவர் அண்மையில் அரைகுறை ஆடையில் போட்டோ ஷுட் நடத்த அட காற்றின் மொழி சீரியல் நடிகையா இவர் என ஆச்சரியமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.