90ஸ் கிட்ஸ்களின் டாப் ஹீரோ நடிகர் ஜாக்கி சானின் பிறந்தநாள்- அவரின் முழு சொத்து மதிப்பு விவரம்
ஜாக்கி சான்
ஒரு காலகட்டத்தில் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வந்தவர் ஜாக்கி சான்.
தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டவர் ஸ்டண்ட் மாஸ்டராக தனது பணியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்க முதன்முதலில் Fish Of Fury என்ற படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார்.
ஆக்ஷன் காட்சிகளை எப்படி நகைச்சுவையாக மாற்றலாம் என்பதை தனது படத்தின் காட்சி மக்களின் கவனத்தை பெற்றவர்.
போலீஸ் ஸ்டோரி, டிராகன் லார்ட், ரஷ் ஹவர், கராத்தே கிட், ஷாங்காய் நூன், டிரங்கன் மாஸ்டர் போன்ற படங்கள் தமிழ் மட்டுமில்லாது உலகம் முழுவதும் ஜாக்கி சான் புகழ் பரவ காரணமாக இருந்தது.
சொத்து மதிப்பு
இன்றோடு 70 வயதை எட்டியுள்ள நடிகர் ஜாக்கி சானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக, அவரின் வயதான தோற்றம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் பலரும் புலம்பி வந்தார்கள்.
இன்று நடிகர் ஜாக்கிசான் பிறந்தநாள், அவருக்கு மக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர், அதோடு அவரது சொத்து மதிப்பு விவரமும் வெளியாகியுள்ளது. ஜாக்கி சான் மொத்தமாக 400 மில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 3300 கோடி.