தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நிலையில் சீரியல் நடிகை ரச்சிதா போட்ட பதிவு- எமோஷ்னலான புகைப்படம்
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி படு கோலாகலமாக தொடங்கியது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா கடந்த எபிசோடில் வினுஷா மற்றும் யுகேந்திரன் என 5 பேர் வெளியேறிவிட்டார்கள்.
திடீரென ஏன் 2 எலிமினேஷன் என ரசிகர்கள் ஷாக் ஆகி தான் உள்ளனர். இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 7 வீட்டில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக 5 பிரபலங்கள் நுழைந்துள்ளனர் அதில் ஒருவர் தான் சீரியல் நடிகர் தினேஷ்.
இவர் நடிகை ரச்சிதாவின் கணவர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
நடிகை பதிவு
தினேஷ் நிகழ்ச்சி சென்று ரச்சிதா குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில் சீரியல் நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான போட்டோவை போட்டுள்ளார்.
அதில் இறந்த தனது தந்தையின் 11 நாள் நிகழ்ச்சியின் புகைப்படத்தை பதிவிட்டு, தனது அம்மாவை கையை பிடித்து உனக்கு நான்-எனக்கு நீ என பதிவு போட்டுள்ளார்.
அதனை கண்ட ரசிகர்கள் ரச்சிதாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)