ஓட்டு விஜய்க்குதான் ஆனால் அது முடியாது.. சீரியல் நடிகை ஆல்யா அதிரடி பதில்
நடிகை ஆல்யா
விஜய் இன்று இந்திய சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தீவிர அரசியலில் இறங்கி விட்டார்.
தற்போது, இவர் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி 69 படத்தை முடித்த கையோடு, முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார். இவரின் இந்த அரசியல் முடிவுக்கு பல சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
அதிரடி பதில்
இந்நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா விஜய் அரசியல் வருகை குறித்து அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட நேரம் இல்லை. ஆனால் என் ஓட்டை கண்டிப்பாக விஜய்க்கு தான் போடுவேன்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்க்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
