குக் வித் கோமாளி 5ல் களமிறங்கும் புது கோமாளி.. பிரபல சீரியல் நடிகை தான்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசன் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. புது தயாரிப்பு நிறுவனம், புது இயக்குனர், புது நடுவர், புது போட்டியாளர்கள் என பல மாற்றங்கள் இந்த முறை செய்யப்பட்டு இருக்கிறது.
நடுவராக இருந்து செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்திருக்கிறார்.
புது கோமாளி
போட்டியாளர்களாக விடிவி கணேஷ், யூடியூபர் இர்பான், ஸ்ரீகாந்த் தேவா, திவ்யா துரைசாமி, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா உள்ளிட்ட பலரும் வர இருக்கின்றனர்.
அது போல கோமாளிகளாக புகழ் உள்ளிட்ட பிரபலங்கள் வருவது மட்டுமின்றி மேலும் பலரை விஜய் டிவி களமிறக்க இருக்கிறது.
தெய்வமகள் சீரியலில் நடித்து இருந்த நடிகை ஷபி ஷப்னம் தான் புது கோமாளியாக வர இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.