சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை சரண்யா! விலை இத்தனை கோடியா?
நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற தொடர்களில் நடித்து இருப்பவர் சரண்யா துராடி. அவர் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்து இருந்தார். ஆனால் அந்த தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு சரண்யா வேறு புது தொடர்களில் நடிக்காமல் இருக்கிறார்.
புது BMW கார்
இந்நிலையில் தற்போது சரண்யா துராடி ஒரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். புது பிஎம்டபுள்யூ கார் உடன் அவர் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் அவர் புது காதல் கதை தொடங்குகிறது, எங்கள் குடும்பத்துக்கு புது உறுப்பினரை வரவேற்கிறோம் என கூறி இருக்கிறார்.
தற்போது அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஏற்கனவே சின்னத்திரை பிரபலங்களான ஆல்யா மானசா, மணிமேகலை, ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்ட பலரும் சொகுசு கார் வாங்கி இருக்கும் நிலையில் சரண்யா துராடி அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார்.

விலை
BMW X5 என்ற காரை தான் சரண்யா வாங்கி இருக்கிறார். அந்த BMW காரின் விலை சென்னையில் கிட்டத்தட்ட ஒரு கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நட்சத்திரங்கள் இவ்வளவு விலை கொடுத்து கார் வாங்கி இருப்பதும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் தான் வெளியேறினாரா ஆர்யன்! வெளியான பாக்கியலட்சுமி சீரியல் ரகசியம்