தனது இரட்டை குழந்தைகளின் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்வேதா- குவியும் லைக்ஸ்
ஸ்வேதா
சன் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் முடிவடைந்த தொடர் சந்திரலேகா.
2014ம் ஆண்டு ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ, ஜி.எஸ்.சந்தியா பந்தேகர், தனுஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த தொடரில் சந்திராவாக நடித்து வந்த ஸ்வேதா காலேஷ் முடித்ததும் விளம்பரங்களில் நடித்து வந்திருக்கிறார்.
அதற்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2007ம் ஆண்டு அஜித்தின் ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தவர் 2009ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியலில் அறிமுகமாகி நடித்தார்.
திருமணம், குழந்தை
கடந்த வருடம் இவருக்கு பிரபலத்துடன் திருமணம் நடந்தது, பின் கர்ப்பமாக இருந்த ஸ்வேதா அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.
ஒரு குழந்தை ஆண் குழந்தையாம், ஒரு குழந்தை பெண் குழந்தையாம். இந்த நிலையில் தங்களது இரண்டு குழந்தைகளையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.