பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் கண்மணிக்கு இப்படியொரு சோகமா?- வருத்தத்தில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் படு பிரபலம். பிரபலமாக ஓடினாலும் இந்த தொடரில் இருந்து நடிகர்கள் சிலர் விலகியிருந்தனர், புதியதாக வந்தவர்களை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
அஞ்சலி என்கிற கண்மணி
தொடர் ஆரம்பத்தில் இருந்து இதில் அஞ்சலி வேடத்தில் நடித்து வந்தவர் கண்மணி. இவருக்கு இதுநாள் முதல் தொடர் என கூறப்படுகிறது, அவரது கதாபாத்திரம் மக்களிடம் ரீச் ஆகியிருந்தது.
ஆனாலும் அவர் அண்மையில் தொடரில் இருந்து விலகி இருந்தார். காரணம் லீட் ரோலில் வேறொரு சேனலில் ஒரு புதிய தொடரில் கமிட்டாகி இருந்தார்.
அமுதாவும்.......
ஜீ தமிழில் தான் அமுதாவும்...... என்ற தொடர் ஒளிபரப்பாக இருந்தது, இதில் தான் கண்மணி நடிக்கிறார். ஆனால் ஒரு புரொமோ வந்ததை தாண்டி சீரியல் குறித்து எந்த தகவலும் இல்லை, எனவே சீரியல் நின்றுவிட்டதா என ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
உண்மை காரணம்
சில சீரியல்களின் காரணமாக அமுதாவும்...... என்ற தொடர் இன்னும் ஆரம்பிக்கவில்லையாம். அடுத்த மாத இறுதியில் தொடர் தொடங்கிவிடும், நிறுத்தப்படவில்லை என உண்மை தகவல் வந்துள்ளது. இருந்தாலும் சீரியல் குழு ஏதாவது புரொமோ வெளியிட்டு ரசிகர்களுக்கு வருத்தத்தை குறைக்கலாம்.
தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்