புதிய வீடு கட்டியுள்ள பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான தர்ஷிகா... வெளியான போட்டோஸ்
நடிகை தர்ஷிகா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகிகளில் ஒருவர் தான் தர்ஷிகா. மாடலாக முதன்முறையாக தனது பயணத்தை துவங்கியுள்ளார்.
இவர் வைப் வித் தர்ஷி என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கொடுத்த சீரியலாக உள்ளது பொன்னி. இந்த தொடருக்கும் முன் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அடுத்து சீரியல்கள் கமிட்டாகி நடித்து வந்தவர் திடீரென சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பெரிய ஆட்டம் ஆடவில்லை என்றாலும் இவரும் மக்களின் பேவரெட் போட்டியாளராக தான் வலம் வருகிறது.
புதிய வீடு
பிக்பாஸ் முடிந்த பிறகு தர்ஷிகா பெரியதாக இன்னும் நடிக்க துவங்கவில்லை.

ஆனால் வழக்கமாக செய்வது போல் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளாராம். கிரஹப்பிரவேசம் செய்யும் போது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.