அட சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே
ஆல்யா மாசனா-சஞ்சீவ்
சின்னத்திரையில் ரசிகர்கள் விரும்பும் சில ஜோடிகள் உள்ளார்கள். அதில் ஒரு ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா.
இருவரும் விஜய்யில் ராஜா ராணி என்ற தொடர் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறி இப்போது 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் உள்ளார்கள்.
ஆல்யா மானசாவின் வீட்டில் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் திடீரென யாருக்கும் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டனர்.
இப்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் கயல் தொடர் நடிக்க ஆல்யா மானசா அதே டிவியில் இனியா என்ற தொடர் நடிக்கிறார்.
புதிய வீடியோ
ஆல்யா, சஞ்சீவ் சீரியலில் நடிப்பதை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது, நிறைய வீடியோக்கள் வெளியிடுவது என நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.
அப்படி அண்மையில் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள், அதாவது அவர்கள் தங்களது குழந்தைகளுக்காக ஒரு புதிய யூடியூப் பக்கம் திறக்க உள்ளார்களாம்.
அதுகுறித்து ஒரு வீடியோ வெளியிட அதில் அவர்களது மகனை கண்ட ரசிகர்கள் அட இவர்களது மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.