சன் டிவி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி. இதில் படங்கள், நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பானது விட தொடர்கள் தான் ஏகப்பட்டது ஓடியுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்கள், இடையில் 3 மணி நேரம் மட்டும் திரைப்படம் ஓடும்.
இப்போது ஒளிபரப்பாகும் கயல், ரோஜா, வானத்தைப் போல, சுந்தரி போன்ற தொடர்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம், இதெல்லாம் நன்றாக தான் ஓடிக் கொண்டு வருகிறது.
புதிய தொடர்
அண்மையில் சன் தொலைக்காட்சியில் பூவே உனக்காக என்ற தொடர் முடிவுக்கு வந்தது, அதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். இப்போது அந்த தொடர் முடிவடைய புதிய தொடர் பற்றிய தகவல் வந்துள்ளது.
அது என்னவென்றால் செவ்வந்தி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம். இதில் 90களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கி வந்த ராகவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அவருடன் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மற்றபடி இந்த தொடர் குறித்து எந்த தகவலும் இல்லை.
விக்ரம் ஓவர்சீஸில் மட்டும் இத்தனை கோடிகளா, கபாலி ரெக்கார்ட் ப்ரேக்