பேட்ட பட நடிகரின் மனைவி கொடுத்த பாலியல் புகார்.. வெளியான பரபரப்பான வீடியோ
பாலிவுட் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளில் நடித்து சிறந்த நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார்.
இவர் சினிமாவை தாண்டி சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட நவாசுதீன் சித்திக் அவரது மனைவி மீது சந்தேகப் பட்டு அவருக்கு பிறந்த குழந்தையை ஏற்க மறுப்பதாகவும், அதனால் அவரின் மகனை மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.

பாலியல் புகார்
இந்நிலையில் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
"அதில், நவாசுதீன் அவருக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து குழந்தையை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். அவர் ஒரு போதும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டதில்லை".
"குழந்தைகளை பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. நவாசுதீன் போன்ற மோசமானவர்களிடம் என்னுடைய குழந்தை செல்ல கூடாது. காவல் நிலையத்தில் நவாசுதீன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளேன். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரியுமா?
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri