சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் சென்சேஷனல் நடிகை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சேயோன்
தாய் கிழவி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவகுமார் முருகேசன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் சேயோன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்தபோது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதுவும், 'அடியே OG இஸ் பேக் டி' என்கிற வசனம் வைரலானது.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ
கதாநாயகி அறிவிப்பு
சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இளம் சென்சேஷனல் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால், வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதோ பாருங்க:
A birthday to remember and a journey to look forward to!
— Raaj Kamal Films International (@RKFI) May 6, 2026
Wishing #BhagyashriBorse A very Happy Birthday as she joins the #Seyon Family #HappyBirthdayBhagyashri#சேயோன் #OneMoreTime#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM… pic.twitter.com/GvVIxmoZQv