விஜய்யின் 66வது படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

By Yathrika Apr 26, 2022 04:50 AM GMT
Report

நடிகர் விஜய் பீஸ்ட் பட படப்பிடிப்பின் போதே தனது அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை அறிவித்துவிட்டார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் படம் நடிக்க இருப்பதாக ஒரு புகைப்படத்துடன் விஜய்யின் 66வது பட தகவல் வந்தது.

அதில் இருந்தே படம் குறித்து நிறைய கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தது. கதை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இருக்கும் என வம்சி இதற்கு முன்பு சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

பட பூஜை

3 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை படு விமர்சையாக நடந்தது.இதில் நடிகை ரஷ்மிகா, விஜய்யை பார்த்து கியூட்டாக செய்த விஷயங்கள் எல்லாம் வைரலானது, அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தது.

விஜய்யின் 66வது படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Shaam Confirms Acting In Vijay 66

புதிய அப்டேட்

கடந்த சில நாட்களாகவே இதில் விஜய்யின் சகோதரராக நடிப்பவர் குறித்து நிறைய பேச்சு அடிபடுகிறது, மைக் மோகன் படத்தில் நடிக்கிறார் என கூற அதை அப்போதே அவர் மறுத்துவிட்டார்.

அடுத்து நடிகர் ஷ்யாம் விஜய்யுடன் நடிக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வர அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் ஷ்யாம் தனது இன்ஸ்டாவில் விஜய்யுடன் 66வது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

விஜய்யின் 66வது படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Shaam Confirms Acting In Vijay 66

2022ல் தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூலித்த படங்கள்- டாப் 5 படங்களின் விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US