மூவராக தல தீபாவளி கொண்டாடிய ஷபானா - ஆர்யன்.. வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க
ஷபானா - ஆர்யன்
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயகியாக இடம்பிடித்தவர் நடிகை ஷபானா. இவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதினால் இவர்கள் இவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. பின் ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், அப்போது கூட ஷபானா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால், மிகவும் எளிமையாகவே கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடி தனியாகவே தல தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள் என தெரிகிறது.
மூவராக தல தீபாவளி
இதனால் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ' யாரு சொன்னாங்க? நாங்க தனியா தான் தல தீபாவளி கொண்டாட போகிறோம் என்று, எங்களுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி அப்பா எம் எஸ் பாஸ்கர் " என்று பதிவு செய்துள்ளார்.
ஆம், நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து ஷபானா - ஆர்யன் தங்களது தல தீபாவளியை மூவராக கொண்டாடியுள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu