பிக் பாஸ் 9ல் இந்த தீவிர விஜய் ரசிகை வருகிறாரா? நடிகைக்கு அடித்த ஜாக்பாட்
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 பற்றிய பேச்சு தற்போது துவங்கிவிட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் இந்த 9வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார் என உறுதியான தகவல் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குக் வித் கோமாளி நடிகர் உமைர், சீரியல் நடிகை ஃபரினா ஆகியோர் பிக் பாஸ் 9ல் உறுதியாக கலந்துகொள்ளப்போகிறார் என்கின்றனர்.
ஷபானா
இவர்கள் வரிசையில் தற்போது சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி புகழ் ஷாபனாவும் பிக் பாஸில் கலந்துகொள்ள போகிறாராம். இப்படி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இவர் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை ஆவார். விருது விழா, நிகழ்ச்சிகள் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் விஜய் குறித்து ஷபானா பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.