அட்லீயை அழைத்து பேசிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம்.. ஷாருக்கான், விஜய்யை வைத்து பிரமாண்ட திரைப்படம்
இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறார்.
இதற்கு காரணமாக ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் திரைப்படம். இப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்தது.

ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் படம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை.
அட்லீயின் அடுத்த படம்
இந்நிலையில், விஜய் - ஷாருக்கானை வைத்து படம் பண்ண முயற்சி செய்து வருகிறாராம். இதற்கு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும், அதற்கான கதை தயார் செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதே போல், ஜவான் படத்தை பார்த்துவிட்டு, ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயை அழைத்து பேசியுள்ளனர். அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என அந்த தயாரிப்பு நிறுவனம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். ஆகையால் அவர்களின் நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்க அட்லீ கதையை தயார் செய்து வருவதாகவும் அவரே பேட்டியில் கூறியுள்ளார்.
இதில் அட்லீ இயக்கப்போவது ஷாருக்கான் - விஜய் படமா அல்லது ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் படமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu