நடிகர் ஷாருக்கானின் இப்போது எந்த நிலைமையில் இருக்கிறார் தெரியுமா?.. மேலாளர் கொடுத்த தகவல்..
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். சினிமாவை தாண்டி கிரிக்கெட்டிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான இவர், சமீபத்தில் அகமதாபாத் நடைபெற்ற போட்டியை பார்க்க நேரில் சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரு,ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லேட்டஸ்ட் தகவல்
தற்போது ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, " ஷாருக்கான் இப்போது நலமாக இருக்கிறார். குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்" என்று பூஜா கூறியுள்ளார்.