ஷாருக்கானின் மேனேஜருக்கே இவ்ளவவு சொத்து இருக்கா? எத்தனை கோடி பாருங்க
பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இதையடுத்து இவர் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கானுக்கு 10 ஆண்டுகளாக மேலாளராக இருந்து வருபவர் பூஜா தத்லானி. இவர் ஷாருக்கான் குடும்பத்துடன் நெருக்கமான நண்பராக இருக்கிறார்.
ஷாருக்கான் வைத்திருக்கும் நிறுவனங்களும் மற்றும் சினிமா சார்ந்த விஷயங்களையும் பூஜா தத்லானி தான் கையாள்கிறார்.

சொத்து மதிப்பு
பூஜா தத்லானி சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீட்டை வாங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் புது வீட்டின் போட்டோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பூஜா தத்லானி மொத்த சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
புஷ்பா 2 படத்தின் வாய்ப்பை நிராகரித்த சமந்தா.. இது தான் காரணமா?