நயன்தாராவுடன் காதலா? நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதில்.. இணையத்தில் வைரல்
ஷாருக்கான்
உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் ஜவான்.
அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கானின் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஷாருக்கானுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவே ஆகும். ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நயன்தாராவுடன் காதலா
இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் இடம் ரசிகர் ஒருவர்க்கு கேட்ட கேள்வி, அதற்கு அவர் கொடுத்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "ஜவான் படத்தில் நடித்தபோது நயன்தாராவிடம் காதலில் விழுந்தீர்களா" என ரசிகர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கொடுத்த ஷாருக்கான் " ஷட் அப். நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஹா ஹா" என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் படுவைரலாகியுள்ளது.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
