அட்லீக்கு வாழ்த்து, ரஜினி உடன் நடிப்பது.. ஷாருக் கான் ட்விட் வைரல்
அட்லீ
இயக்குனர் அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது.
மேலும் அட்லீ தான் விரைவில் அப்பா ஆக இருப்பதாக அறிவித்தார். மனைவி ப்ரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் போட்டோவையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

ஷாருக் ட்விட்
இந்நிலையில் ஷாருக் தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அட்லீ படத்தில் நடிப்பது பற்றி கேட்டதற்கு "Amazing" என கூறி இருக்கிறார். மேலும் அட்லீ பிரியா ஜோடி குழந்தை பெற இருப்பதற்கும் அவர் வாழ்த்து கூறி உள்ளார்.
Amazing and it’s so exciting he and Priya are having a baby now https://t.co/99Ivd8wF0C
— Shah Rukh Khan (@iamsrk) December 17, 2022
ரஜினிகாந்த் உடன் நடிப்பீர்களா என ஒரு ரசிகர் கேட்டதற்கு "அது எனக்கு பெருமை" என பதில் கொடுத்துள்ளார் ஷாருக்.
Will be an honour https://t.co/geDTYluCLS
— Shah Rukh Khan (@iamsrk) December 17, 2022
'வாரிசு Vs துணிவு'.. வெளிநாட்டு பிரீமியர் ஷோ முன்பதிவில் முதலிடம் பிடித்த படம் இதுதான்