ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் எப்படி உள்ளது- முதல் விமர்சனம்
ஷாருக்கானின் ஜவான்
தமிழ் சினிமா இயக்குனர்கள் அனைவருக்கும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, சிலருக்கு அப்படிபட்ட வாய்ப்பும் அமையும்.
அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.
குருவை போன்று படு பிரம்மாண்டம் என்றில்லாமல் ஓரளவிற்கு தனது கதையிலும் அதனை இயக்கும் விஷயங்களிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
முதல் படத்தின் மூலம் கிடைத்த வெற்றி தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.
தனது 5வது படத்திலேயே பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்து ஜவான் படத்தின் மூலம் அதகை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
ஜவான் விமர்சனம்
வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 300 கோடி என்கின்றனர்.
நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி என பலர் நடித்திருக்கும் இப்படம் குறித்து முதல் விமர்சனம் வந்துள்ளது.
படம் சரியாக ஆக்ஷன், காமெடி, த்ரில் என அனைத்தும் கலந்து கலவையாக சீட்டின் நுனியில் உட்கார்த்து படம் பார்க்கும் அளவிற்கு அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார் என முதல் விமர்சனம் வந்துள்ளது.
#JawanReview :⭐⭐⭐⭐#Jawan is a fascinating crime filled movie told from multiple perspectives with perfect pace & cinematography. An absolute entertainer package with action, comedy, thrill & what else.. @iamsrk @VijaySethuOffl & @Atlee_dir keep us on the edge of our seat. pic.twitter.com/apMfQyQbHp
— Always Bollywood (@AlwaysBollywood) September 4, 2023
சங்கீத ஜாதி முல்லை பாடல் புகழ் நடிகர் கண்ணனை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க