முதல் நாள் வசூலில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இத்தனை கோடி வசூலிக்குமா?- வெளிவந்த கணிப்பு
ஷாருக்கானின் ஜவான்
நடிகர் ஷாருக்கான் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமா இயக்குனருடன் கைகோர்த்துள்ள திரைப்படம் ஜவான்.
தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் இந்த ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் Preview ஷாருக்கானை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது, எதிர்ப்பார்ப்பும் கூடியுள்ளது.

பட வசூல்
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தவே இப்போது ஜவான் திரைப்படத்திற்கான வியாபாரமும் பெரிய அளவில் உள்ளதாக வட மாநில பத்திரிக்கைகளில் கூறப்படுகிறது.
அதன்படி ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ. 100 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.
வட மாநிலங்களில் ரூ. 60 கோடியும், தென்னிந்தியாவில் ரூ. 35 முதல் 40 கோடி வரை படம் வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.