ரூ. 1000 கோடி வசூலித்து கம்பேக் கொடுத்த ஷாருக்கான்- பதான் முழு வசூல் விவரம்
ஷாருக்கானின் பதான்
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக வலம் வருபவர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நிறைய சாதனைகளை செய்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ என்ற திரைப்படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.
அதன்பிறகு ஷாருக்கான் நாயகனாக எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.
இந்த வருடம் தான் ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் பதான் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ரிலீஸிற்கு முன் படம் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் ரிலீஸ் ஆன பிறகு நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
பட வசூல் விவரம்
கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலை கடந்துள்ளதாம்.
இந்த வருடம் வெளியான படங்களில் ரூ. 1000 கோடி வசூல் சாதனை செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
என்னது லோகேஷ் கனகராஜிற்கு திருமணம் ஆகி குழந்தைகளே உள்ளார்களா?

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
