24 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகரை சந்தித்து புகைப்படம் எடுத்த ஷாலினி... வைரலாகும் போட்டோ
ஷாலினி
குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஏராளமான படங்களில் நடித்து பின் அனியாதிபிராவு என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி.
அந்த படம் தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படம் மூலம் ஷாலினியின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது, தொடர்ந்து அதிக படங்களும் நடித்து வந்தார்.
1999ம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க அவரது வாழ்க்கையே மாறியது. அஜித்துடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொள்ள ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம், காதலுக்கு மரியாதை என 5 படங்களில் நாயகியாக நடித்தவர் பின் சினிமாவை விட்டு விலகினார்.
லேட்டஸ்ட் போட்டோ
சில வருடங்களுக்கு முன் இன்ஸ்டா பக்கம் வந்த ஷாலினி, அவ்வப்போது நிறைய புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அண்மையில் நடிகர் மாதவனை நேரில் சந்தித்துள்ள ஷாலினி அவருடன் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
24 வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.