திருடப்பட்ட ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த ஐபோன்.. பார்சலில் திரும்ப கிடைத்தது எப்படி?
ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் மிகவும் பாப்புலர் ஆனவர். அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் வைரல் ஆகின்றன.
கடந்த வாரம் பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்மு அவரது நண்பரின் வீட்டில் தங்கி இருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது விலையுயர்ந்த ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன் காணாமல் போய்விட்டது அறிந்து ஷாக் ஆனார்.
அது பற்றி போலீசில் புகார் அளித்த அவர் தனது நட்பில் இருப்பவர்கள் மீதே சந்தேகம் இருப்பதாக கூறி இருக்கிறார்.

பார்சலில் வந்த போன்
இந்நிலையில் நேற்று ஷாலு ஷம்முவுக்கு மதிய நேரத்தில் Dunzoவில் ஒரு பார்சல் வந்து இருக்கிறது. அதை திறந்து பார்த்தபோது அதில் அவரது ஐபோன் இருந்திருக்கிறது.
"நான் நினைத்தது போலவே என் friend தான் போனை திருடியது. 8 வருட ரிலேஷன்ஷிப் வீணாக போனது" என ஷாலு ஷம்மு கூறி இருக்கிறார்.
அண்ணாமலை பட நடிகர் சரத் பாபு மருத்துவமனையில் கவலைக்கிடம்! ரசிகர்கள் அதிர்ச்சி