ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் இணைக்கிறாரா!
வேள்பாரி
கடந்த சில நாட்களாகவே வேள்பாரி நாவல் திரைப்படமாக உருவாக இருக்கிறது, என்றும் அதில் ஷங்கர் மற்றும் சூர்யா இணையவுள்ளதாக தகவல் பரவின.
அதன்படி விருமன் பட இசைவெளியீட்டு விழாவில் கூட சூர்யா வேள்பாரி நாவல் குறித்து பேசியிருந்தார். அது குறித்து வேறொரு மேடையில் பேசுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே தற்போது ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி நாவல் படமாவது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆம், இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கபதாக சூர்யா இப்படத்தில் நடிக்க வாய்ப்பி்ருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பான் இந்தியளவில் நட்சத்திரங்கள் இப்படத்தில் தேர்ந்தெடுக்கபட இருக்கிறார்களாம். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஹ்மானின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ பாருங்க