தோல்வியை சந்தித்த இந்தியன் 2 .. இந்தியன் 3வது பாகம் குறித்து வெளிவந்த அதிரடி முடிவு
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. பெரிய பட்ஜெட்டில் ஷங்கர் பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருந்தார்.
ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் படத்தை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்ததையும் பார்த்தோம். இந்த படம் திரையில் மட்டுமில்லாமல் ஓடிடியில் வெளிவந்தது.
அதை பார்த்தும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர், அதுமட்டுமில்லாமல் இந்த படம் குறித்து மீம்கள் பல போடப்பட்டு இணையத்தில் ட்ரெண்டிங் வகையில் இருந்தது.
ஷங்கர் அதிரடி முடிவு
இந்தியன் 3 படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்தியன் 2 படம் கடும் ட்ரோல்களை சந்தித்ததை பார்த்த ஷங்கர் உள்ளிட்ட படக்குழு இந்தியன் 3ல் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகவும் தேவைப்பட்டால் ரீஷூட் செய்ய இருப்பதாகவும் முன்பு கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தியன் 3 படத்தை திரையில் வெளியிடாமல் நேரடியாக Netflix ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் மற்றும் இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்து, தற்போது அதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
