ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவிற்கு பதிலாக நாயகியாக முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
பாய்ஸ் படம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய எல்லா படங்களுமே மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
அப்படி அவரது இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தில் சித்தார்த், நகுல், தமன், பரத், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க விவேக் அவர்களுக்கும் நல்ல கதாபாத்திரம் இருந்தது.
நட்பு, காதல், வயசு கோளாறு, பிரிவு, லட்சியம் என இளைஞர்களின் ஒட்டுமொத்த எமோஷனையும் இந்த படத்தில் காட்டியிருப்பார். படத்தை தாண்டி ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் செம ஹிட், பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
இதில் நடித்த பலருக்கும் பாய்ஸ் படம் அவர்களின் சினிமா பயணத்திற்கு ஒரு ஆரம்ப படமாக அமைந்தது.
முதல் சாய்ஸ்
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஜெனிலியோ இப்போது திருமணம் ஆகி 2 குழந்தைகள் பெற்று செட்டில் ஆகிவிட்டார்.
பாய்ஸ் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் தேர்வானவர் நடிகை வரலட்சுமி தானாம். சித்தார்த்-வரலட்சுமி வைத்து ஷங்கர் அவர்கள் போட்டோ ஷுட் எல்லாம் நடத்தினாராம்.
ஆனால் அந்த நேரத்தில் சரத்குமார், வரலட்சுமியை நடிக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம்.