இதுவரை இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இந்தியன் 2
இந்தியன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
படத்தின் நீளம் தான் கலவையான விமர்சனங்களுக்கு காரணமாக இருந்த நிலையில், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகளை தூக்கிவிட்டு, புதிய வெர்ஷன் படம் திரையிடப்பட்டு வருகிறது.
ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 திரைப்படம் முதல் நாள் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைய துவங்கிய நிலையில், 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, உலகளவில் இந்தியன் 2 திரைப்படம் கடந்த 9 நாட்களில் ரூ. 148 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளருக்கு லாபமான படமாக இந்தியன் 2 அமைந்துள்ளது என கூறப்பட்டாலும், இந்தியன் 2 திரைப்படத்திற்கு இது மிகவும் குறைவான வசூல் என திரை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இந்தியன் 2விற்கு எப்படிப்பட்ட வசூல் கிடைக்கப்போகிறது என்று.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan
