மோதல் காரணமாக ஷங்கரின் புதிய படத்தில் இருந்து விலகிய முக்கிய பணியாளர் !
தெலுங்கில் பிஸியான ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ஷங்கர். 2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் தெலுங்கு பக்கம் சென்று அங்கு படத்தை இயக்கி வருகிறார்.
அதன்படி ராம் சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் RC15, பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

விலகிய ஒளிப்பதிவாளர்
மேலும் இப்படத்தில் சீனியர் ஒளிப்பதிவாளர் திரு தான் இப்படத்தில் பணியாற்றி வந்துள்ளார், ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ரத்தினவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கருடனான மோதல் காரணமாக திரு விலகியுள்ளதாகவும், திரு வேறொரு படத்தில் பணியாற்ற இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி திரு இப்படத்தில் இருந்து விலகியதும் ராம் சரண் தான் ரத்தினவேலுவை இப்படத்தில் பணியாற்ற அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

வலிமை படத்தில் ஸ்டண்ட்ஸ் செய்தது அஜித் இல்லை ! இவர் தானாம்..