வலிமை படத்தில் ஸ்டண்ட்ஸ் செய்தது அஜித் இல்லை ! இவர் தானாம்..
பிளாக் பஸ்டர் வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே அவரின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் வலிமை பட காலெக்ஷனை அறிவித்து இருந்தார்.

அஜித்திற்கு டூப் போட்ட நபர்
இந்நிலையில் வலிமை படத்தில் பெரியளவில் பேசப்பட்டதே அப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தான், அந்த காட்சிகளை படமாக்கப்பட்ட விதமும், ஸ்டண்ட்ஸ் காட்சிகளும் அனைவரையும் கவர்ந்தது.
ஆனால் தற்போது அப்படத்தில் ஸ்டண்ட்ஸ் காட்சிகளுக்கு அஜித்திற்கு டூப் போட்ட நபர் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
விஷால் என்ற நபர் தான் அஜித்திற்கு டூப் போட்டுள்ளார், மேலும் வலிமை பட ஸ்டண்ட் காட்சிகள் குறித்த வீடியோக்களையும் விஷால் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கும் விஷால் அவர் தான் ஸ்டண்ட்ஸ் செய்ததாகவும் கூறியுள்ளார்.


இரண்டாவது புதிய தொழிலை தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார்- வீடியோவுடன் இதோ